எங்களைப் பற்றி | ABOUT US

“டிரையாட் தமிழ்க்கல்வி®” (கிரீன்ஸ்போரோ/ஹைபாயிண்ட்/வின்ஸ்டன்சேலம் வடகரோலினா) முத்தையா சின்னசாமி , சௌந்தரராஜன் கனகராஜன் & சத்யா ஆகிய தமிழ் ஆர்வலர்களால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அருள் அவர்களின் முயற்சியால் வின்ஸ்டன் சேலம் கிளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது,அந்நாளிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® ஒரு இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனமாக NC மாநிலத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்.

Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® சான்றிதழ் எண் C201835100842-1 மற்றும் வரி எண் 83-3348621 ஆகும்.

2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கிறோம்.

இந்த முயற்சியின் நோக்கம் மற்றும் சில நன்மைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

* Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® மாணவர்கள் தங்கள் அமெரிக்க பள்ளிகளில் இருமொழி /பை-லிங்குவல் திட்டத்தின் அடிப்படையில் தேர்ச்சிப்பெற சில தகவல்களை சேகரித்துள்ளோம். இந்த தேர்வு 10 வது வகுப்பில் நடத்தப்படுகிறது. மாநில அளவிலான இந்த மொழி தேர்ச்சி தேர்வுக்கு நம் மாணவர்களை பயிற்சி கொடுத்து அனுப்புவது Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® யின் முக்கிய இலக்குகளில் ஒன்று.

* Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® யின் விழாக்களில் மாணவர்கள் புரியும் தன்னார்வல சேவை மணித்துளிகளை தங்கள் அமெரிக்க உயர்நிலை பள்ளியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

* இந்த அங்கீகாரம், எங்களுக்கு நன்கொடைகள் / பரிசுகளைப்பெற அனுமதிக்கும்; நன்கொடையாளர்களுக்கு வரி விலக்கு சான்றிதழ் அளிக்க அனுமதி பெற்றுத்தரும்.

* மேலும் Triad NC, USA பகுதியில் “தமிழ் கல்வி இயக்கமாக” ஒர் அங்கீகாரம் பெற்றுத்தரும்.

* Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான வருடாந்திர பள்ளி நிகழ்வுகள் நடைபெறும்:

* பொங்கல் கொண்டாட்டம், தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம், மற்றும் பட்டமளிப்பு விழா.

* Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® யின் விழாக்களில் அதன் சிறப்பு விருந்தினர்கள், பங்கேற்கும் மாணவர்கள் , அவர் தம் குடும்பத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் மட்டுமே பங்குபெறலாம்.

* Triad Tamil Kalvi ® / டிரையாட் தமிழ்க்கல்வி ® எப்போதுமே ஒரு அரசியல் அல்லாத, மதச்சார்பற்ற அமைப்பாகத்தான் இயங்கும்.

* Triad Tamil Kalvi ®/ டிரையாட் தமிழ்க்கல்வி ® ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்; வேறு எந்த அமைப்புகளுடன் தொடர்பும் கிடையாது . எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தச்சூழ்நிலையிலும் Triad Tamil Kalvi ®/ டிரையாட் தமிழ்க்கல்வி ® யின் பெயரை / இலச்சினையை(logo) பயன்படுத்த எந்த நிறுவனத்திற்கும் அனுமதி கிடையாது.

என்றும் தமிழ்ப்பணியில் உங்கள் ,

Triad Tamil Kalvi ®/ டிரையாட் தமிழ்க்கல்வி ®

ஏதேனும் ஐயம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

“Triad TamilKalvi® (Greensboro/HighPoint/WinstonSalem – North Carolina) was started by a few Tamil enthusiasts in 2015. It has since then thrived and expanded successfully with outstanding support from the local Tamilar community.

In 2015 we started with a count of 19 kids, our sessions started off with alphabets and casual classroom sessions with stories and rhymes. The word spread out rapidly and we had expanded to 23 kids by the year 2016 and more requesting for standardization of text books and resource materials.

In 2018 Winston Salem, NC with the help of like minded volunteers from Winston Salem, NC we have started a branch.

Standardization of Text Books

After reviewing the standards on textbooks and reading material we narrowed down to American Tamil Academy. We successfully completed ATA standards for Nilai1 and Nilai2 by the academic year 2016-2017.

Life Time Membership with ATA

In 2017-2018 we completed the formalities to become life-time members. This academic year 2017-2018 we have registered 40 students for Nilai1, Nilai2 and Nilai3.

Thanks to our volunteers for their efforts in teaching, conducting activities and coordinating events between kids and parents. Today we stand well connected with commitments from parents and more involvement from kids.